வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (30/10/2018)

கடைசி தொடர்பு:17:06 (30/10/2018)

`ஊழலைக் கண்காணிக்கிறார்களா... மக்களைக் கண்காணிக்கிறார்களா?' - சர்ச்சையை ஏற்படுத்தும் உறுதிமொழிப் படிவம்!

ஊழல் எதிர்ப்பு  விழிப்புணர்வு வாரம்

த்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில், "ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்பு விழிப்பு உணர்வு வாரம்  தொடங்கி நடைபெற்று  வருகிறது. 29-ம் தேதியில் ( நேற்று திங்கள் கிழமை ) இருந்து வரும் நவம்பர் 4 -ம் தேதி வரை நடைபெறும் இந்த விழிப்பு உணர்வு வார நிகழ்ச்சியில், 'நேர்மை தவறாமை' உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது. இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்களான தெற்கு ரயில்வே, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு  ஊழியர்கள்,  தங்களது நேர்மை தவறாமை உறுதிமொழி எடுத்துவருகின்றனர்.

அதேபோன்று, ஊழல் தடுப்பு உறுதிமொழியைச் சாமான்ய மக்களும் ஏற்க வேண்டும்  என்பதற்காக, மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதற்காக, பிரத்தியேகமாக அந்த ஆணையத்தின் இணையதளத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழியை எடுப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது. இதில், பொதுமக்களும் பங்கேற்று நேர்மை தவறாமை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளலாம். அப்படி வெளியிடப்பட்ட உறுதிமொழி ஏற்பு விண்ணப்பத்தில், உறுதிமொழி ஏற்பவரின் மொத்த விவரத்தையும் பதிவிட்டால் மட்டுமே உறுதிமொழி ஏற்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். மேலும், உறுதிமொழி ஏற்புக்கு எதற்கு ஒரு தனிப்பட்ட மனிதனின்  ஒட்டு மொத்தவிவரமும் தேவை எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம், நான் ஒரு சாமான்யன் என்ற முறையில், ஊழல் தடுப்பு உறுதிமொழி  ஏற்பைப் பதிவுசெய்யலாம்  என முயன்றேன். அப்படி பதிவுய்யப்பட்ட விண்ணப்பத்தில், அடையாள அட்டை, ஆதார் அட்டை, செல்போன் நம்பர், பிறந்த தேதிக்கான உறுதிச் சான்றுகள் என ஆயிரத்தெட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டியுள்ளது. ஊழலைக் கண்காணிக்கிறார்களா இல்லை, மக்களைக் கண்காணிக்கிறார்களா எனத் தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் சாமான்யர்களைப் பற்றிய ஒட்டுமொத்த விவரங்களைக்  கேட்பது  சரியான முறையாகத் தெரியவில்லை. இப்படி சாமான்யர்களிடம் முழு விவரங்களையும்  கேட்பந்த் தவிர்த்துவிட்டு,  ஊழல் செய்பவர்களின் விவரங்களையும் டேட்டாக்களையும் கண்டுபிடித்து வெளியிட்டால் நன்றாக  இருக்கும். அதேபோன்று, சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தைப் பற்றிய தகவலையும்  வெளியிடலாம் " என்றார்