வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (30/10/2018)

கடைசி தொடர்பு:19:10 (30/10/2018)

"கொஞ்சம் வருத்தம்தான்" - தகுதிநீக்கம்குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி!

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில், மனத்தளவில் கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில், மனத்தளவில் கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

ஆறுக்குட்டி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், அவர்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இதுகுறித்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, "எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் மனத்தளவில் கொஞ்சம் கஷ்டம் இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு அம்மாவால் கொடுக்கப்பட்ட இடம் அது. மக்கள் பிரச்னைக்காகப் போராடி இப்படி ஆகியிருந்தால்கூட, அவர்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவாக இருப்பார்கள். ஆனால், தனி ஒரு  மனிதனுக்காக 18 எம்.எல்.ஏ-க்கள் பதவியை இழப்பது எந்த விதத்தில் நியாயம். இதில் பாதிக்கப்படுவது மக்கள்தான்.

டி.டி.வி. தினகரன், கட்சிக்காக என்ன உழைத்தார். எதையுமே செய்யாமல் கட்சிக்குள் குழப்பம்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி மிகவும் எளிமையாக இருக்கிறார். யார் வேண்டுமானாலும் அவரைச் சந்திக்கலாம். தமிழகத்தில், இனி எட்டி நிற்கும் முதல்வரைவிட, கிட்ட நிற்கும் முதல்வரைத்தான் மக்களும் தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த தி.மு.க ஆட்சிதான் என்று சிலர் ஸ்டாலினை ஏமாற்றிவருகின்றனர். ஆனால், அது ஒருபோதும் நடக்காது" என்றார்.