வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:07:39 (31/10/2018)

``பண்டிகை காலத்தில் திரையரங்கில் கூடுதல் காட்சிகள்” - உயர் நீதிமன்றம் அனுமதி

தீபாவளி என்றாலே இனிப்புகள் பட்டாசுகளுடன் சினிமா என்பதும் தமிழர்களுடன் பிரிக்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் `சர்கார்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், படத்தின் கதை யாருடையது என்பது தொடர்பான பல சர்ச்சைகள் நீடித்து வந்தது. அவையும் இப்போது முடிவுக்கு வந்து படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் சர்கார் குறித்து தீர்ப்பு

சமீபகாலமாகத் தயாரிப்பாளர்கள் பலர் தங்களுக்குச் சரியான வசூல் கணக்கு காண்பிக்கப்படுவதில்லை எனக் கவலை தெரிவித்துவந்தனர்.விழா நாள்களில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடுவது தொடர்பாக வழக்கு ஒன்றை தேவராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ``அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகளை திரையிட்டு வரிஏய்ப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விழாக்காலங்களிலும், வார விடுமுறை நாள்களிலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் கூடுதல் காட்சிகளைத் திரையிடலாம்” எனத் தீர்ப்பளித்துள்ளது.