தேசிய ஒற்றுமை ஓட்டம் - நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு | "Run for Unity" in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (31/10/2018)

கடைசி தொடர்பு:11:20 (31/10/2018)

தேசிய ஒற்றுமை ஓட்டம் - நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

சர்தார் வல்லபாய் படேலின்  பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

ஒற்றுமை ஓட்டம்

`இந்தியாவின் இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று. இந்தியாவின் முதல் துணைப்பிரதமரும், சுதந்திரத்துக்குப் பிறகு பல சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த பகுதிகளை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றியவர் படேல். டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கைய நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஓடினர். இதேபோல் சென்னையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தேசிய ஒற்றுமை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தீவுத்திடலில் தொடங்கிய ஓட்டம் கலங்கரை விளக்கத்தில் நிறைவு பெற்றது. டெல்லியில் நடைபெற்ற ஓட்டத்தில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மர் பங்கேற்று ஓடினார்.