மனைவி மரணம்... பக்கவாதத்தில் மகள்... தந்தை எடுத்த விபரீத முடிவு | father who tried to kill daughter in madurai

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (01/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (01/11/2018)

மனைவி மரணம்... பக்கவாதத்தில் மகள்... தந்தை எடுத்த விபரீத முடிவு

பக்கவாத நோயால் அவதிப்பட்டு வரும் மகளை பார்த்துக்கொள்ள முடியாததால் தந்தையே கொலை செய்த  சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் கொடுத்த புகாரில் தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ராஜாஜி மருத்துவமனை

மதுரை தெற்குவாசல் கருப்பணன் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (73). இவருக்கு செந்தில் என்ற மகனும் கற்பக சுந்தரி எனும் மகளும் இருந்துவருகின்றனர். கற்பகசுந்தரி (38) கடந்த சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார். கற்பக சுந்தரியின் தாயும் சில மாதத்தில் இறந்ததால் வேலுச்சாமி, தன் மகளை பராமரிப்பதற்கு சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மகள் தூங்கிக்கொண்டிருக்கும்போது தந்தை வேலுச்சாமி துண்டால் கழுத்தை நெரித்து கொலை  செய்துள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் கற்பக சுந்தரி சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து மகன் செந்தில் அளித்த புகாரின் பெயரில் வேலுச்சாமியைத் தெற்கு வாசல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.