வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (01/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (01/11/2018)

`அ.தி.மு.க, தி.மு.க-வை விமர்சிப்பது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

தி.மு.க-வுடன் பங்காளி சண்டை இல்லை. தமிழகத்தின் நலனுக்காக அ.தி.மு.க., தி.மு.க போன்ற கட்சிகளை விமர்சிக்கிறோம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம், கேரளத்தில் இருந்து பிரிந்து தாய்த் தமிழகத்துடன் இணைந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி மண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தாய்த் தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்க எண்ணற்ற தியாகிகள் தங்களது வாழ்க்கையை இழந்தார்கள். நன்றி செலுத்தும் நாள் இன்று மார்ஷல் நேசமணி உட்பட தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவது அனைவரின் கடமை. தமிழகத்தில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்றபோது, அங்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்பு உணர்வு நடவடிக்கை தமிழக அரசு எடுத்திருப்பதை நேரில் பார்த்தேன். மேலும், இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்த சுகாதாரத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இடைத்தேர்தல்குறித்து மாநில பா.ஜ.க முடிவுசெய்யும். தி.மு.க-வுடன் பங்காளி சண்டை இல்லை. தமிழகத்தின் நலனுக்காக அ.தி.மு.க., தி.மு.க போன்ற கட்சிகளை விமர்சிக்கிறோம்" என்றார்.