வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (01/11/2018)

கடைசி தொடர்பு:16:12 (01/11/2018)

`பா.ஜ.க-விலும் தினகரன் ஆதரவுக் கறுப்பு ஆடுகள்!’ - 18 தொகுதி தேர்தலும் தமிழிசை அறிக்கையும் 

`80 சதவிகித வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் என்னால் நிறுத்த முடியும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால், நமக்கு மூன்றாவது இடம் கிடைக்கும். நம்முடைய உண்மையான பலமும் தெரிய வரும்' என அறிக்கை அளித்திருக்கிறார் தமிழிசை.

`பா.ஜ.க-விலும் தினகரன் ஆதரவுக் கறுப்பு ஆடுகள்!’ - 18 தொகுதி தேர்தலும் தமிழிசை அறிக்கையும் 

`தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம்' எனத் தினகரன் கூறிய கருத்து, பா.ஜ.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. `18 தொகுதிகளுக்கும் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. முதலில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதே சரியானது' என மேலிடத்துக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார் தமிழிசை. 

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், `20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் யார் மண்குதிரை எனத் தெரிந்துவிடும். டெண்டர் வழக்கில் மின்னல் வேகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்பீல் செய்ததுபோல, இந்த வழக்கிலும் துரிதகதியில் செயல்பட வேண்டும். நாங்கள் 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டு, ` தேர்தல் வேண்டாம்' என்று தலைமைச் செயலாளர் மூலமாகத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியதுதான் இவர்கள் இருவரின் வீரம்' எனப் பேசியிருந்தார். `உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்குச் செல்ல மாட்டோம்' என்ற தினகரனின் கருத்தை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. ஏனென்றால், `மேல்முறையீட்டுக்குச் சென்றால் அதை வைத்தே இந்த வழக்கை இன்னும் சில காலம் நீட்டிக்க முடியும்' என ஆளும்கட்சியினர் எதிர்பார்த்ததுதான். அதற்கேற்ப, சபாநாயகர் தனபால் சார்பாக உச்ச நீதிமன்றத்திலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமிஆளும்கட்சிக்கும் தினகரனுக்கும் நடக்கும் மோதலின் ஒருகட்டமாக இது பார்க்கப்பட்டாலும், தமிழக பா.ஜ.க-வும் இந்த விவகாரத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தேர்தல் நடத்தப்படுவதை பா.ஜ.க விரும்பவில்லை. ஏனென்றால், `தேர்தல் நியாயமாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. `இடைத்தேர்தல் ஒழுங்காக நடக்காது' என ராமதாஸும் கூறியிருக்கிறார். `தேர்தல் நடத்தப்பட வேண்டும்' எனக் கூறக்கூடிய பா.ஜ.க நிர்வாகிகளை, தினகரன் ஆதரவுக் கறுப்பு ஆடுகள் என்ற பட்டியிலில் சேர்க்கப்பட உள்ளனர். `18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்' என நினைக்கிறது அகில இந்திய பா.ஜ.க தலைமை. `ஓட்டுக்குப் பணம் கொடுக்க பா.ஜ.க தயாராக இல்லை. பிற மூன்று கட்சிகளும் நிச்சயமாகப் பணம் கொடுப்பார்கள். எனவே, தேர்தல் நடத்த வேண்டாம்' என மேலிடத்துக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார் தமிழிசை" என்றவர், 

``அவர் அளித்துள்ள அறிக்கையில், `உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், கட்சியை மூன்றாவது இடத்துக்குக் கொண்டு வந்துவிடுவேன். இதை என்னால் உறுதியாகச் செய்ய முடியும். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை ஆளும்கட்சியினர் ஒத்திப் போட்டுக்கொண்டே இருக்கின்றனர். தற்போது, 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஏதோ காரணத்தால் ஆளும்கட்சி கூறுகிறது. அது என்ன காரணம்... என்ன கணக்கு என்று தெரியவில்லை. தம்பிதுரை சொல்வதைப் பார்த்தால், நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய கூட்டணி இல்லாமல் செய்யக்கூடிய கணக்காகத்தான் அது இருக்கும். 80 சதவிகித வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் என்னால் நிறுத்த முடியும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால், நமக்கு மூன்றாவது இடம் கிடைக்கும். நம்முடைய உண்மையான பலமும் தெரிய வரும். இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வலுவான கூட்டணியும் கிடைக்கும். இடைத்தேர்தல் நல்லமுறையில் நடக்க வாய்ப்பில்லை' எனக் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தையொட்டியே உள்துறை அமைச்சகமும் மேலிடத்துக்கு அறிக்கை அனுப்ப உள்ளது" என்றார் விரிவாக,