வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (01/11/2018)

கடைசி தொடர்பு:16:48 (01/11/2018)

'சர்கார்' வெற்றிக்காக காஞ்சி காமாட்சியைத் தரிசித்த ஏ.ஆர்.முருகதாஸ்!

`சர்கார்' படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்செய்தார். கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, யாருக்கும் தெரியாமல் எளிமையாக வந்து தரிசனத்தை முடித்துக்கொண்டு, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டார். 

ஏ.ஆர். முருகதாஸ், சர்கார், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் படம், `சர்கார்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. ‘செங்கோல்’ என்ற பெயரில் பதிவுசெய்து வைத்திருந்த கதையை வைத்து எடுக்கப்பட்டதே ‘சர்கார்’ படம் என உதவி இயக்குநர் வருண் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சர்க்கார் கதைக் கரு சர்ச்சையைத் தொடர்ந்து, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதால், பிரச்னை ஒழுவழியாக முடிவுக்குவந்தது.

இந்த நிலையில், சர்கார் படம் வெற்றியடைய வேண்டி இன்று காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசிக்க வந்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு சாதாரண பக்தர் போல தனியாகவே கோயிலுக்கு வந்ததால், முருகதாஸ் வருவதை யாரும் கவனிக்கவில்லை. காமாட்சி அம்மனை தரிசித்தபோது, முருகதாஸை அடையாளம் கண்டுகொண்ட அர்ச்சகர் ஒருவர், அந்த விவரத்தை பூஜைசெய்து கொண்டிருந்த அர்ச்சகரிடம் கூறியிருக்கிறார். பிறகு, விரைவாக தரிசனத்தை முடித்துக்கொண்ட முருகதாஸ், கூட்டம் கூடுவதற்குள் 10 நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறிவிட்டார். காஞ்சிபுரம் வந்த பரப்பரப்பே தெரியாமல் அங்கிருந்து சென்றார் முருகதாஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க