வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (01/11/2018)

கடைசி தொடர்பு:19:13 (01/11/2018)

'அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்’ - நழுவிய ஓ.பன்னீர்செல்வம்!

 

ops

தேவரின் தங்கக் கவசத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் உள்ள வங்கியில் தற்போது பத்திரமாக ஒப்படைத்தார் .

கடந்த 2014-ம் ஆண்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் , 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் - 13.5 கிலோ தங்கத்தால் ஆன கவசத்தை  தேவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சுகந்திரப் போராட்ட தியாகி பசும்பொன்  தேவரின்   111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது  குருபூஜை விழாவையொட்டி கடந்த 24-ம் தேதி தேவரின் தங்கக்கவசம் பசும்பொன்னுக்கு அனுப்பப்பட்டது. தேவர் ஜெயந்தி முடிந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் தங்கக் கவசம், மதுரை அண்ணா நகர் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளைக்கு  பெட்டகத்தின்மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் நினைவிடப் பொறுப்பாளர்கள் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைத்தனர் அப்போது, வருவாய்த் துறை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்,  'பொதுமக்களுக்கும் ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்' எனத் தெரிவித்துவிட்டுக் கிளம்பினார்.