வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (01/11/2018)

கடைசி தொடர்பு:20:28 (01/11/2018)

தீபாவளி செலிபிரேஷன் - உங்கள் ஊருக்கு சிறப்பு பேருந்துகள் உண்டா?

வ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் செல்லும் மக்கள், எளிதில் செல்லும் வகையில், தமிழக அரசு, சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் மொத்தம் 11,367 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வருகிற 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு, சென்னை கோயம்பேடு உட்பட 30 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, முன்பதிவு நடைபெற்று வருகிறது. 

தீபாவளியை முன்னிட்டு 3.11.2018 முதல் 5.11.2018 வரை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 4,542 சிறப்பு பேருந்துகள் உட்பட 11,367 பேருந்துகளும் பிற மாவட்டங்களிலிருந்து 9,200 பேருந்துகளும் என மொத்தம் 20,567 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து

இயக்கப்படும் சிறப்பு பேருந்து தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விகிரவாண்டி, பண்ருட்டி வழியாகக் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து, ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை, காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர் மற்றும் ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி. மேலும், கோயம்பேடு வழியாகப் பிற ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் செல்கின்றன. 

ஆம்னி

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க