பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் திருமணம் - ஈ.பி.எஸ்ஸால் கடுப்பான ஓ.பி.எஸ் | OPS Supporters got angry against Edappadi

வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (01/11/2018)

கடைசி தொடர்பு:21:09 (01/11/2018)

பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் திருமணம் - ஈ.பி.எஸ்ஸால் கடுப்பான ஓ.பி.எஸ்

பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக ஓ.பன்னீர் செல்வம் நெடுநேரம் காத்திருந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ் ஓபிஎஸ்


தமிழக சட்டமன்ற துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கோவையில் அக்டோபர் மாதம் 26-ம் தேதியன்று இரவு நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். முன்னதாகவே, ஓ.பி.எஸ். திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டார். அதே நேரத்தில், முதல்வரும் வருவதாக புரோகிராம் இருந்தது. முதல்வர் வந்துவிடுவார். இதனால், நானும் அவரும் சேர்ந்தே மேடைக்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டு ஓ.பி.எஸ் தனியாக அமர்ந்திருந்தாராம். ஆனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் முதல்வர் வந்தாராம்.

அதுவரை பொறுமைகாத்த ஓ.பி.எஸ்ஸின் நிலையைப் பார்த்து அவரது ஆதரவாளர்கள் கொதித்துவிட்டனர். ஓ.பி.எஸ்ஸை வேண்டுமென்றே எடப்பாடி தவிர்க்கப்பார்த்தார். வருவதற்கு லேட் ஆனது என்றால், மரியாதை நிமித்தம் அந்தத் தகவலையாவது ஓ.பி.எஸ்ஸிடம் தெரிவித்திருக்கலாம். அதையும் யாரும் தெரிவிக்கவில்லை. அதனாலோ என்னவோ... மறுநாள் திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் காலை நேரத்திலேயே ஓ.பி.எஸ் தனியாகப் போய் கலந்துகொண்டுவிட்டுப் போனார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.