வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:07:56 (02/11/2018)

ஆத்தூர் சிறுமி கொலை வழக்கு - தினேஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமியை தினேஷ் குமார் என்பவர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்து தலையைத் தனியாக அறுத்து ரோட்டில் போட்ட சம்பவம் அனைத்து  தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.  

ஆட்சியர்

சேலம் ஆத்தூர் தளவாய்ப்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னப்பொண்ணு. இவர்களின் கடைசி மகள் ராஜலட்சுமி வயது 13. தளவாய்ப்பட்டி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வீட்டுக்கு அருகே வசிப்பவர் தினேஷ்குமார் என்கிற கார்த்திக். வயது 26. அவரின் மனைவி சாரதா. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இவர்கள் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இரு குடும்பத்தினரும் நட்பாகவே பழகி வந்திருக்கிறார்கள்.

தினேஷ்குமார் நெல் அறுவை வண்டி டிரைவராக இருக்கிறார். ஆயுத பூஜை முடித்து வீட்டுக்கு வந்தவர், கடந்த 22-ம் தேதி இரவு 7:30ஆத்தூர் சிறுமியின் தாய் மணிக்கு  சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்குள் புகுந்து கழுத்தை வெட்டிக் கொலை செய்து தலையை ரோட்டில் போட்ட சம்பவம். அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி சிறுமியை கொலை செய்த தினேஷ்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

``பாப்பா பூ கட்டிட்டு இருந்தாள். நான் கதவோரமா உக்கார்ந்துட்டு இருந்தேன். தினேஷ் டாயர் போட்டுட்டு வெறும் மேலோடு கையில் வீச்சறுவாளோடு வீட்டுக்குள் திடுக்குன்னு புகுந்தான். என்னடா சாமீ.. அறுவாளோடு வந்திருக்கான்னு தடுத்தேன். ஒரே தள்ளில் நான் கீழே விழுந்துட்டேன். பாப்பா மரண பயத்துல, `` அண்ணா நான் என்னங்கனா பண்ணினேன்''ன்னு சொல்லி முடிப்பதற்குள் கழுத்தில் ஒரே வெட்டு. துடிக்க துடிக்க தரத்தரன்னு வெளியில இழுத்துட்டு வந்து வாசல்ல வச்சு கழுத்தை அறுத்து தலையை எடுத்துட்டுட்டுப் போயிட்டான். என் கண் முன்னே வெறும் முண்டமா இழுத்து இழுத்து உயிர் அடங்கியது'' என்று தலை தலையா அடித்துக்கொண்டு கதறுகிறார் ராஜலட்சுமியின் தாய் சின்னப்பொண்ணு.