`அடிக்கிற கைதான் அணைக்கும்!' - ராகுலுக்கு புது போன் வழங்கிய நடிகர் சிவக்குமார் | Sivakumar presented new phone to rahul

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (02/11/2018)

கடைசி தொடர்பு:11:42 (02/11/2018)

`அடிக்கிற கைதான் அணைக்கும்!' - ராகுலுக்கு புது போன் வழங்கிய நடிகர் சிவக்குமார்

நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமார் அந்த இளைஞருக்கு புதிய செல்போனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

சிவக்குமார்


கடந்த வாரம் முழுவதும் ட்விட்டர் ஃபேஸ்புக் முழுவதும் நடிகர் சிவக்குமார் மையம்தான். அக்டோபர் 29-ம் தேதி மதுரையில் நடந்த செல்ஃபி சம்பவமே இந்த ஹைப்புக்கு காரணம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். திறப்பு விழாவின்போது வாசலை நோக்கி நடந்து வந்த சிவக்குமாரை அவரின் முன்னால் நின்ற ஒரு இளைஞர் செல்ஃபி எடுக்க முற்பட்டார். 

சிவக்குமார்

சிவக்குமார் அந்த நபரை நெருங்கிவந்து செல்போனை தட்டிவிட்டார். சிவக்குமாரின் ஆக்ரோஷமான முக பாவனையும், அவர் நடந்து கொண்ட விதமும் அங்கு சுற்றியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. சிவக்குமார் இப்படிச் செய்திருக்கக்கூடாது என்னும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சிவக்குமார் வருத்தம் மற்றும் மன்னிப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த இளைஞருக்கு புதிய மொபைலும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அந்த இளைஞர் பெயர் ராகுல். அவருக்காக நெட்டிசன்கள் பலர் குரல் கொடுத்திருந்தனர்.  `ஒரு பிரபலமாக இருந்தால் இப்படியெல்லாம் நடப்பது சகஜம்தான். அதற்காக இளைஞரின் போனை தட்டிவிட்டது தவறு. உங்களுக்கு அந்த போன் சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அந்த இளைஞர் அந்த போனை வாங்கக் கண்டிப்பாக கஷ்டப்பட்டிருப்பார். அவருக்கு புதுபோன் வாங்கிக் தரவேண்டும்’ என்னும் கருத்து பரவலாகப் பகிரப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு புது மொபைலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சிவக்குமார். 

ராகுல்

 21,000 ரூபாய் மதிப்புள்ள  Vivo போனை வாங்கிக்கொடுத்துள்ளார். சிவக்குமாரின் உதவியாளர் மூலம் அந்தப் போன் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க