`இப்போதாவது நீதியைப் பெற்றுக்கொடுங்கள்!'- ராஜலட்சுமி விவகாரத்தில் குமுறும் மனித உரிமை ஆர்வலர் | Evidence kathir view on Rajalakshmi Murder

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (02/11/2018)

கடைசி தொடர்பு:13:40 (02/11/2018)

`இப்போதாவது நீதியைப் பெற்றுக்கொடுங்கள்!'- ராஜலட்சுமி விவகாரத்தில் குமுறும் மனித உரிமை ஆர்வலர்

மீ டு-வுக்கு குரல் கொடுக்கும் இந்த சமூகம், சிறுமி கொலைக்காக குரல் கொடுக்கவில்லை. கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ‘மீ டூ’ கிடையாதா என எவிடன்ஸ் கதிர் பேசியிருக்கிறார்.

சேலம் ரோஹினி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர்கள் சாமிவேல் - சின்னப்பொண்ணு தம்பதி. இவர்களது 13 வயது மகள் ராஜலட்சுமி கடந்த 22-ம் தேதி தினேஷ்குமார் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். ராஜலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்த தினேஷ் சிறுமியின் கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுமியை வாசலில் வைத்துக் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். சிறுமியின் தலையுடன் ராஜேஷ் அங்கிருந்து சென்றார். தினேஷை அவரது மனைவியே
காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தன் கணவருக்கு கடந்த சில நாள்களாக மனநிலை சரியில்லை என்றும் தெரிவித்திருந்தார். தினேஷ் குமாரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரைச் சிறையில் அடைத்தனர். முதலில் இந்த வழக்கைச் சாதாரண கொலை வழக்காகக் கையாண்ட காவல்துறை பின்னர் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்களின் கண்டனங்களால், சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ், கடந்த 30-ம் தேதி மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து சேலம் எவிடென்ஸ் கதிர்மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிறுமியைக் கொலை செய்த தினேஷ்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த 10 நாள்களுக்குப் பிறகு ராஜலட்சுமியின் வீட்டில் ஆட்சியரும் எஸ்.பி.யும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து எவிடன்ஸ் கதிர் கூறுகையில், ``மீ டு-வுக்கு குரல் கொடுக்கும் இந்தச் சமூகம், சிறுமி கொலைக்காக குரல் கொடுக்கவில்லை. கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ‘மீ டூ’ கிடையாதா. பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்வது மட்டும்தான் மீ டூவா. கொல்லப்பட்ட ராஜலட்சுமியின் வீட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்ல வேண்டும். ராஜலட்சுமியின் வீட்டுக்கு செல்லாத சேலம் மாவட்ட ஆட்சியர் மீதும் எஸ்.பி.மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். சற்று கடுமையாகவும் பேசி இருந்தேன். சம்பவம் நடந்த 10 நாள்களுக்குப் பிறகு தற்போது ராஜலட்சுமியின் வீட்டில் ஆட்சியரும் எஸ்.பி.யும் விசாரணைக்காக வந்திருக்கின்றனர். நீங்கள் அப்போதே வந்திருக்க வேண்டும். பரவாயில்லை. இப்போது கூட நம்புகிறோம். நீதியைப் பெற்றுக் கொடுங்கள்’ என்றார்.