வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (02/11/2018)

கடைசி தொடர்பு:17:50 (02/11/2018)

`நீ எப்படி போட்டிக்கு போகலாம்?'- எஸ்சி மாணவரை தாக்கிய பள்ளி நிர்வாகி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவரும்  பட்டியலின மாணவனைக் கொடூரமான முறையில் தாக்கிய பள்ளித் தாளாளர் மகள் பெப்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, மாணவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

மாணவன் ஜெனித்

மானாமதுரையில் இயங்கிவரும் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் பன்னிரெண்டாவது வகுப்பு படித்துவருகிறார் ஜெனித் என்கிற மாணவர். இவரின் தந்தை செல்வம், சிறந்த ஓவிய ஆசிரியருக்கான நல்லாசியர் விருது பெற்றவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி தொட்டியத்தில் நடைபெற்ற  மாநில அளவிலான, மூன்று நாள் நடந்த  ஓவியப் போட்டியில், ஜெனித் கலந்துகொண்டு வெற்றிபெற்று சான்றிதழ் பெற்ற மகிழ்ச்சியில் பள்ளிக்கு வந்திருக்கிறார். நேற்று, பள்ளிக்குச் சென்ற மாணவரை அழைத்த பள்ளித் தாளாளர் மகள் பெப்சி, `நீ ஏன் கடந்த மூன்று நாள்களாக பள்ளிக்கு வரவில்லை' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜெனித், `பள்ளியில் அனுமதி வாங்கிய பிறகு தான் ஓவியப் போட்டிக்குச் சென்றேன். இதோ நான் வாங்கிய சான்றிதழ்' என்று காட்டிய பிறகு, கடுமையாகத் தாக்கியிருக்கிறார் பெப்சி.

ஓவியத்தில் பல்வேறு வகையான திறமைகளைப் பெற்றிருக்கும் மாணவரை பள்ளி நிர்வாகம் பாராட்டாமல், அவரை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், இதேபோன்று மாணவர்கள் மத்தியில் ஜெனித் தாக்கியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றிருக்கிறார் என்கிறார்கள், மாணவரின் பெற்றோர். இந்த நிலையில், மீண்டும்  மாணவன் ஜெனித் தாக்கப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அவரது மகள் பெப்சி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மானாமதுரை போலீஸில் பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள். இந்தப் புகாரையடுத்து,  குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள் விசாரணைசெய்துவருகிறார்கள்.

இதுகுறித்து புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கிறிஸ்துராஜ் பேசும்போது,"ஜெனித் என்கிற மாணவன் 12-ம் வகுப்பு படிப்பதால், அடிக்கடி லீவு எடுக்க வேண்டாம்; சரியாகப் படிக்காததால் உங்க அப்பாவ வரச்சொல்லு என்று சொன்னோம். அவுங்க வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. அவனை நாங்கள் யாரும் சத்தியமாக அடிக்கவில்லை. என்ன காரணத்தினால் என் பள்ளியை அசிங்கப்படுத்துகிறார் ஜெனித் அப்பா? டொனேஷன் இல்லாமல், அரசு நிர்ணயம் செய்த பள்ளிக்கட்டணத்தை மட்டுமே வாங்கிக்கொண்டு சிறப்பாக பள்ளி நடத்தி வருகிறேன்" என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க