வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (02/11/2018)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை வெளிநாட்டுக் குரங்குகள்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கப்புசின் குரங்கு, அணில் வால் குரங்கு மற்றும் சிவப்பு கை டாமரின் குரங்கு என மூன்றுவிதமான அரியவகை வெளிநாட்டுக் குரங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குரங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், மனிதக் குரங்கு, பபூன் குரங்கு போன்ற வெளிநாட்டுக் குரங்கு வகைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. மேலும், பூங்காவில் வெளிநாட்டுக் குரங்கு வகைகளை அதிகரிக்கும் வகையில் கப்புசின் குரங்கை மைசூர் உயிரியல் பூங்காவில் இருந்து, விலங்குகள் பரிமாற்ற முறைமூலம் வண்டலூர் பூங்காவுக்குப் பெற்றுள்ளனர். அணில் வால் குரங்கு மற்றும் சிவப்புக் கை டாமரின் குரங்கும் சென்னை வண்டலூர் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மூன்று இன குரங்குகளும் பூங்கா மருத்துவமனை நோய்த்தடுப்பு பகுதியில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன.

அரியவகை குரங்கு வண்டலூர் பூங்கா

எந்த தொற்றும் இல்லாததால், நாளை முதல்(03.11.18)  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. அணில்வால் குரங்கு, நீண்டவாலை பெற்றுள்ளதால், தோள்பட்டை வரை தனது வாலை அனுமன் போல உயர்த்தும் தன்மைகொண்டது. இதனால், சிறுவர்களையும் பொதுமக்களையும் அணில்வால் குரங்கு வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரியவகை குரங்கு, வண்டலூர் பூங்கா

தனது கருமை உடலில் சிவப்புக் கையைப் பெற்றிருப்பது டாமரின் குரங்கின் சிறப்பு. அதுபோல கப்புசீன் குரங்கு, கயிறுகள் மற்றும் கொம்புகளில் ஏறி ஊஞ்சலாடுவதைப் பார்க்க அழகாக இருக்கும். இவையணைத்தும் சிறுவர்களை வெகுவாகக் கவரும் எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மக்கள், அரியவகை குரங்குகளை பார்த்து மகிழ்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கிளம்பிட்டீங்களா மக்களே…

நீங்க எப்படி பீல் பண்றீங்க