வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:07:19 (03/11/2018)

`குவாரி எடுக்கணும்னா கலெக்டருக்கு ரூ.5 லட்சம்?’ - அதிர வைக்கும் மைன்ஸ் அதிகாரி

மதுரை மாவட்ட கனிம வள அலுவலகம் தீபாவளி நேரத்தில் வளம் கொழிக்கும் அலுவலமாக மாறிவருகிறது. கிரானைட் தொழிலால் வளம் கொழித்த இத்துறை அலுவலகம், கிரானைட் குவாரிகள் மூடப்பட்டதையடுத்து பொலிவிழந்து காணப்பட்டது. பழைய கலெக்டர் வீரராகவராவ் மாறுதலாகிச் செல்வதற்கு ஒராண்டுக்கு முன்பாக பட்டா வைத்திருக்கும் நில உரிமையாளர்களுக்குச் சவுடு மண் அள்ள லைசென்ஸ் வழங்கினார். சவுடு மண் பெயரில் பட்டாதாரர்கள் வைகையாற்றுக் கரையோரங்களில் பல கோடிக்கு மணல் கொள்ளையடித்து வருகின்றனர்.

மைன்ஸ்

இந்த நிலையில், அதில் கவனம் செலுத்தி வந்த கனிம வளத்துறையினர் அடுத்தகட்டமாக கிராவல் குவாரிகளுக்கு லைசென்ஸ் வழங்கத் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு முன்பாக பல கோடிகளைச் சுருட்டத் தயாராகி வருகின்றனர். இதற்காக ஏடி மைன்ஸ் விஜயராகவன், மஸ்தான ஒரு டீம் வைத்திருக்கிறாராம். அந்த டீம் மூலமாக மட்டுமே குவாரிகளுக்கான பைல் கையெழுத்து ஆகுமாம். அப்படி விண்ணப்பித்தவர்களுக்குப் பல கட்டளைகள் கொடுத்து அதற்குச் சம்மதிப்பவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் தரப்படும் என மிரட்டாத குறையாக சொல்லி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஷயம் தெரிந்த சிலர், லைசென்ஸக்கு விண்ணப்பித்தவர்களின் மனு பரிசீலிக்க முதலில் மைன்ஸ், மினிஸ்டருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டுமாம். அதன் பிறகுதான் பரிசீலனையே நடைபெறுமாம். அடுத்ததாகப் பட்டியல் நீள்கிறது. அலுவலகச் செலவு  ரூபாய் ஒரு லட்சம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றுக்காக ரூபாய் ஒரு லட்சம், கலெக்டருக்கு ரூபாய் 5 மைன்ஸ்  அதிகாரிலட்சம் என மொத்தம் 8.5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டுமாம். இதுபோக அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் வரி தனி கணக்கு. இதையெல்லாம் விட சிறப்பு ஏதோ ஏஸ்ஸார் குரூப் என்று ஒன்று உள்ளதாம். இவர்களுக்கு ஒரு லோடுக்கு 300 ரூபாய் வேறு கொடுக்க வேண்டுமாம். இவர்கள் யாரென்று என்று பார்த்தால் ஏற்கெனவே ஒட்டுமொத்தமாக மணல் குவாரிகளை எடுத்த கொள்ளைக்கும்பலைச் சேர்ந்தவர்கள். இதற்குச் சம்மதித்தால் மட்டுமே லைசென்ஸ். இப்படி கண்டிஷன் போடுறவரு கனிம வளத்துறை துணை இயக்குநர் இல்லை. அவருக்குக் கீழ் பணியாற்றும் உதவி இயக்குநர் விஜயராகவன் என்பவர்தான் இந்த ஆட்டம் போடுறாரு என்கிறார்கள் சிலர். இவர் ஏற்கெனவே ராமநாதபுரத்தில் இப்போதைய கலெக்டர் நடராஜ் கீழ் பணியாற்றியவர். அதனால் அவரிடம் உள்ள நெருக்கத்தை வைத்து தன் மேலதிகாரிக்கு மேல் ஆட்டம் போடுகிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு குவாரி உரிமையாளரும் தீபாவளிக்கு பெரிய தொகையை கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறாராம் மைன்ஸ் அதிகாரி. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கும் புரோக்கர்களைப் போல் மதுரை மைன்ஸ் அலுவலகத்தில் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்  விவரம் அறிந்த மைன்ஸ் அதிகாரிகள்.

இதுகுறித்து மதுரை துணை கனிம வளத்துறை துணை இயக்குநர் விஜயராகவனிடம் பேசினோம். ``நான் எந்த புரோக்கரையும் வைத்திருக்கவில்லை. என்னிடம் எந்தக் கோப்பும் பெண்டிங் இல்லை. நான் யாரிடமும் பணம் வாங்குவதில்லை” என்று சொல்லும்  அவர் நாம் சொன்ன புரோக்கர்கள் குறித்து எதுவும் சொல்லாமல் மவுனமாகவே இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க