மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் சண்டை நடக்கிறது - ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்! | G Ramakrishnan slams modi government

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (03/11/2018)

மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் சண்டை நடக்கிறது - ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்!

மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் சண்டை நடக்கிறது. மத்திய அரசு பொருளாதார கொள்கையில் திவால் ஆனதுதான் இந்த சண்டைக்கு காரணம் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன்


மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பிரதமரும் மத்திய அரசும் விளம்பரத்தில் காலம் தள்ளுகிறது. சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு செலவு செய்த பணம் 3,000 கோடி. ஆனால், அதற்கான விளம்பர செலவு 8,000 கோடி ரூபாய். 50 இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா வரி போட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் சண்டை நடக்கிறது. மத்திய அரசு பொருளாதார கொள்கையில் திவால் ஆனதுதான் இந்தச் சண்டைக்குக் காரணம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 100 சதவித வரி  உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு  மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் வரியை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே, உள்ளாட்சித் தேர்தலை மாநில அரசு உடனே நடத்த வேண்டும்.

கல்வித் துறையில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இதைத் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நவம்பர் மாத இறுதியில் மக்கள் கோரிக்கை மாநாடு நடத்தவும், டிசம்பர் மாதம் மாவட்ட அளவில் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும். டெங்கு, பன்றி காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு தொழில்களுக்கு கடன் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்து உள்ளது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் எதையாவது அறிவித்து மக்களை கவர முயல்கிறார். ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிட்டு இழப்பு மூலம் தமிழ்நாட்டில் 50,000 சிறு தொழில்கள் மூடப்பட்டு உள்ளது. அதைச் சரி செய்ய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும்" என்றார்.