வெளியிடப்பட்ட நேரம்: 21:26 (03/11/2018)

கடைசி தொடர்பு:21:26 (03/11/2018)

அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த இளைஞர் கைது! - நீதிபதி கொடுத்த விநோத தண்டனை

சமூக வலைகதளங்களில் அமைச்சர் ஜெயகுமாரை விமர்சித்ததாகக் கூறி சிங்கப்பூரிலிருந்து, சென்னைக்கு வந்த இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெயக்குமார்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து.இவர் கடந்த 2017-ம் ஆண்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து சமூகவலைத்தளங்களில்  புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வீரமுத்துவை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர் சிங்கப்பூரில் இருந்ததால் கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தீபாவளியை தன் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வீரமுத்து சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார். இந்த தகவலை அறிந்த போலீஸார், வீரமுத்து சென்னை விமான நிலையம் வந்ததும் அவரைக் கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்ததது. அப்போது, தான் செய்தது தவறு என வீரமுத்து மன்னிப்பு கோரினார். அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஊடகங்களின் முன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறி அவரை வழக்கிலிருந்து விடுவித்தார்.