வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:05:30 (04/11/2018)

ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு -தமிழக அரசு உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேருக்கான பணியிடை மாற்றம் மற்றும் பதவி உயர்வைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. ஒரு ஐஜி, இரண்டு டிஐஜி மற்றும் ஆறு எஸ்பிகளுக்கான பணிகள் மாற்றப்பட்டு, புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல்  ஒன்பது ஏடிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு வழங்கி எஸ்பிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவைத் தமிழக அரசின் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.

காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னையில்  குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி டிஜிபி அலுவலக ஐஜி ஆக மாற்றப்பட்டுள்ளார். டிஐஜி பாலகிருஷ்ணன்  சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராகவும், செந்தில்குமாரி சென்னை ரயில்வே டிஐஜியாகவும், துரை அவர்கள் திருவாரூர் எஸ்பியாகவும் , விஜயகுமார் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும் ,விக்ரமன் சென்னை டிஜிபி அலுவலக தானியங்கி மின்னணுப் பிரிவு எஸ்பியாகவும். லட்சுமி அவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை (மேற்கு) எஸ்பியாகவும், ராமர் அறிவுசார் சொத்துடமை அமலாக்கப் பிரிவு எஸ்பியாகவும், தீபா கனிகர் போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராகவும் புதிய பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதிவீரப்பாண்டியன் டிஜிபி அலுவலக காவலர் நலன் எஸ்பியாகவும், ஶ்ரீனிவாசன்  அரியலூர் எஸ்பியாகவும், பாலாஜி ஸ்ரீனிவாசன் கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், பாலகிருஷ்ணன் டிஜிபி அலுவலக உதவி ஐஜியாகவும், சண்முகம் லஞ்ச ஒழிப்புத் துறை (தெற்கு) எஸ்பியாகவும். மீனா சென்னை தலைமையிட பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், ஸ்டாலின் சென்னை தலைமை அலுவலக கட்டுப்பாட்டறை எஸ்பியாகவும். சி.ராஜா சென்னை எஸ்பிசிஐடி எஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.