வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (04/11/2018)

கடைசி தொடர்பு:10:17 (04/11/2018)

”ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம்..! – அ.தி.மு.க ப்ளானை போட்டு உடைத்த தங்க தமிழ்ச்செல்வன்

’’இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தர ஆளும் தரப்பு திட்டமிட்டிருக்கிறது’’ எனத்  தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன்

இது தொடர்பாக நம்மிடம் போனில் பேசிய தங்க தமிழ்செல்வன், “நேற்று ஆண்டிபட்டியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன். திட்டமிட்டபடி வரும் நவம்பர் 10-ம் தேதி அ.ம.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். டிடிவி தினகரன் மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வார். ஆண்டிபட்டி தொகுதியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான திப்பரேவு அணைத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட குமுளியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூபாய் 3 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து அனுப்பியும், எனது தொகுதி என்பதால் நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். தொகுதியில் பல கிராமங்களில் போதுமான குடிநீர் வசதி, வடிகால் வசதி இல்லை. எனவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் என் தொகுதிக்கானது. என் தொகுதி மக்களுக்கானது.” என்றார்.

மேலும் அவர் கூறும் போது, “ஆளும் அ.தி.மு.க., இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தர இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் ஊழல் செய்த பணத்தில் தொகுதிக்கு 200 கோடி வீதமும், கூடுதல் செலவுக்கு ஆயிரம் கோடியும், மொத்தம் 5 ஆயிரம் கோடி செலவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.” என்றார்.