`எல்லா காய்ச்சல்களும் இவர்கள் ஆட்சியில்தான் வருகிறது!’ - துரைமுருகன் கலகல | dmk treasurer durai murugan slams admk government

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/11/2018)

கடைசி தொடர்பு:18:02 (04/11/2018)

`எல்லா காய்ச்சல்களும் இவர்கள் ஆட்சியில்தான் வருகிறது!’ - துரைமுருகன் கலகல

`எல்லா காய்ச்சல்களும், இந்த ஆட்சியில்தான் வருகிறது. எங்கள் ஆட்சி காலத்தில் டெங்கும் கிடையாது பங்கும் கிடையாது” என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டி.டி.வி-ஸ்டாலின் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,``தமிழ்நாட்டு அரசியல் இப்படி போய்விட்டதே என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு கட்சி தலைவரோ ஒரே விமானத்தில் போகக்கூடாதா?. ஹோட்டலில் கூட தங்கக்கூடாதா?” என்றார். டெங்கு குறித்து, ``எங்கள் ஆட்சி காலத்தில் டெங்கு கிடையாது. பங்கும் கிடையாது. இருக்கும் எல்லா காய்ச்சலும் இவர்கள் ஆட்சிகாலத்தில்தான் வருகிறது. எங்கள் ஆட்சியில் டெங்கும் தெரியாது. பங்கும் தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை வரும் டெங்கு இப்போது விதவிதமாக வருகிறது. அரசியல் காய்ச்சல் இவர்களுக்கு வந்ததால் இந்த காய்ச்சல் எல்லாம் வருகிறது. எங்கள் தொண்டர்கள் நிலவேம்பு கொடுக்கிறார்கள். நிலவேம்பு தட்டுப்பாடு உள்ளது. முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்... சுகாதாரத்துறை நடவடிக்கைகளில் பாராட்டும்படி இல்லை. தற்காலிக நடவடிக்கைதான்... மக்களைப்பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. வேறு எதுவோ பற்றி இவர்கள் கவலைப்படுகிறார்கள். கருணாநிதி சிலை திறப்பு பற்றி எங்கள் தலைவர் முறையாக அறிவிப்பார்’’ என்றார்.