வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (05/11/2018)

கடைசி தொடர்பு:08:29 (05/11/2018)

பொறுப்புக்கு ஏற்றவாறு ஸ்டாலின் நடக்கவில்லை - பிரேமலதா விஜயகாந்த் சாடல்!

'ஆளும் கட்சியைத் தட்டிக்கேட்கும் பலம் தி.மு.க-வுக்கு இருந்தும் அதை ஸ்டாலின் செய்யவில்லை' என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார். 

பிரேமலதா

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற தே.முதி.க பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது, ஆளும் கட்சியான அ.தி.மு.க-வையும் எதிர்க்கட்சியான தி.மு.க-வையும் கடுமையாகச் சாடினார். ``தமிழகத்தில் நிலையில்லாத அவல ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆளும் கட்சியின் அவலத்தைத் தட்டிக்கேட்கும் இடத்தில் இருக்கிறது தி.மு.க. 98 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்ன ஆக்கபூர்வமான பணிகளைச் செய்தார்? எதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் தொடர வைக்கிறார் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே கேள்வி. 20 தொகுதியில் இடைத்தேர்தல் வைத்து மக்களுஉடைய வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. 

உண்மையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொறுப்பு இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதைவிட்டுவிட்டு நாங்கள் பின்புற வழியாக வந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை என சப்பைக் காரணத்தைக் கூறுகிறார். உடனடியாக இந்த ஆட்சியை ஸ்டாலின் அகற்ற வேண்டும். பொறுப்பில்லாத ஆட்சி நடந்துகொண்டிருப்பதால்தான் தமிழகம் தற்போது அவலநிலையில் உள்ளது. குட்கா ஊழல், சி.பி.ஐ ரெய்டு என ஊழல் அரசாங்கம் நடைபெற்றுவருகிறது. வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என்று கேட்டால், கஜானாவில் காசு இல்லை என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு அமைச்சர் வீட்டு கஜானாவிலும் கோடிகள் புரளுகின்றன" எனக் குற்றம் சாட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க