வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (05/11/2018)

கடைசி தொடர்பு:10:23 (05/11/2018)

‘இளம் பெண்கள் வந்தால் நடையை அடைப்போம்’- சபரிமலை மேல் சாந்தி அதிரடி!

'சபரிமலை தரிசனத்துக்கு இளம் பெண்கள் வந்தால் நடையை அடைத்து, சுத்தி கலச பூஜை செய்வோம்' என  மேல் சாந்தி உண்ணிக்கிருஷ்ணன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

சபரிமலை

சித்திர ஆட்டத் திருநாள் பூஜைக்காக, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கிறது. இன்று மதியத்துக்கு மேல் பக்தர்கள் பம்பை கடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் 3000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பம்பை மற்றும் சந்நிதானத்தில் உள்ள வியாபார ஸ்தலங்கள், ஓய்வறைகள், விருந்தினர் அறைகள், நன்கொடையாளர்கள் கட்டடம் ஆகியவற்றில் தேவையில்லாமல் யாரும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பம்பையிலும் சந்நிதானத்திலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுள்ளன.

சந்நிதானத்துக்கு வருபவர்கள் ஏதாவது ஓர் அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் ஐயப்ப தரிசனம் செய்வது துக்ககரமானது என பந்தளம் ராஜ குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு சம்பந்தமாக ஐஜி அஜித்குமார் இன்று சபரிமலை மேல்சாந்தி உண்ணிக்கிருஷ்ண நம்பூதிரியைச் சந்தித்தார். அப்போது, "சபரிமலை சந்நிதானத்தில் இளம் பெண்கள் யாராவது வந்து ஆசார கெடுதல் ஏற்படுத்தினால் நடையை அடைப்போம். அத்துடன் சுத்தி கலச பூஜையும் நடத்தப்படும். இன்று மதியம், தந்திரி கண்டரரு ராஜீவரு சந்நிதானம் வருவார். அவரது கருத்துப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என மேல் சாந்தி உண்ணிக்கிருஷ்ணன் நம்பூதிரி தெரிவித்தார்.