வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (05/11/2018)

‘ஒயிலாட்டத்தில் கலக்கிய அமைச்சர் வேலுமணி!’ - கோயில் திருவிழா காட்சிகள்

கோவை காளப்பட்டி அருகே நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில், அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஆகியோர் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ, வைரலாகிவருகிறது.

ஒயிலாட்டம்

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே உள்ள வெள்ளாணப்பட்டி ஊராட்சி கைகோலம்பாளையத்தில், அருள்மிகு சித்தி விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மற்றும் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அப்போது, பாரம்பர்ய நடமான ஒயிலாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  அதில், திடீரென்று அமைச்சர் வேலுமணி, ஆறுக்குட்டி எம்.எல்.ஏ ஆகியோரும் ஒயிலாட்டம்  ஆடினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஏற்கெனவே, எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பழங்குடி மக்களுடன் சேர்ந்து ஆடிய,  பட்டிதொட்டியெங்கும் பரவிய ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோவுக்கு நடனமாடியது வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் நடனத்தை வைத்து, நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்துவருகின்றனர்.