வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (05/11/2018)

கடைசி தொடர்பு:15:19 (05/11/2018)

`கலக்கப்போவது யார்' பழனியின் வீடியோ பேட்டி

பழனி

`கலக்கப்போவது யார்' நிகழ்ச்சியில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பழனி பட்டாளம் ஒரு சிறந்த ஓவியர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? இவருக்கு மிமிகிரி பண்றது கைவந்தக் கலை. நிறைய மிமிகிரி ஷோவில் பங்கேற்று அசத்தியிருக்கிறார். கலக்கப்போவது யார் நிகழ்ச்சிக்கு தன்னுடைய நண்பர்களைப் பார்க்கச் சென்றபோதுதான் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வந்திருக்கிறது. முக்கியமாக வெள்ளித்திரையில் இவருடைய முதல்படம் 'அறம்'. இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது எப்படி? என்பது முதல் பல சம்பவங்களை இவர் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்கிறார். நமக்காக பல குரல்களிலும் மிமிக்ரி செய்துகாட்டியும் இருக்கிறார். இவர் பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க சினிமா விகடன் யூடியூப் சேனலை உடனே சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. 5-ம் தேதி மாலை 5 மணிக்கு உங்கள் சினிமா விகடனில் யூடியூபில்.