வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (05/11/2018)

கடைசி தொடர்பு:20:30 (05/11/2018)

சபரிமலை சித்திரை ஆட்டத் திருநாள் தோன்றியது எப்படி?

சபரிமலையில் நடக்கும் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை திருநாள் தோன்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.

சபரிமலை

இது சித்திரை மாதமும் இல்லை, இப்போது ஏன் சபரிமலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை நடத்த வேண்டும் எனச் சந்தேகம் இருக்கலாம். சித்திரை ஆட்டத் திருநாள் தோன்றிய கதை இதுதான். மக்களாட்சிக்கு முன்பு திருவிதாங்கூர் அரச குடும்பத்திலிருந்து ஆட்சி செய்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பாலராம வர்ம. 1912 ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இன்றைய கேரளா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் இவர்தான். இந்து மதத்தைச் சார்ந்த அனைத்து ஜாதியினரும் கோயில்களில் அனுமதித்து ஆலயப் பிரவேச விளம்பரத்தை வெளியிட்டதன்மூலம் புரட்சி செய்தவர். கல்விக்கு முக்கியத்துவம் அளித்த இந்த மன்னர்தான், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வியை அமல்படுத்தினார்.

சித்திரை திருநாள் மன்னர் பாலராம வர்மா மகராஜா

முன்பு மன்னர்களின் பிறந்த நாளுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதுடன், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதும் வழக்கம். கோயிலில் அனைத்து சாதியினரும் செல்லலாம் என உத்தரவு பிறப்பித்த சித்திரை திருநாள் பாலராம வர்மா மகராஜா பிறந்த நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு விசேஷ பூஜை செய்வதே சித்திரை ஆட்டத் திருநாளாகும்.