சுட்டிகளின் கைவண்ணத்தில் சென்னையில் ஒரு கலர்ஃபுல் கண்காட்சி! | children's art exhibition in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (05/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (05/11/2018)

சுட்டிகளின் கைவண்ணத்தில் சென்னையில் ஒரு கலர்ஃபுல் கண்காட்சி!

ஓவிய கண்காட்சி

வியத்தின் மீது பலவகையான கட்டமைப்புகள் கூறப்பட்டாலும் அதன் முதல்நிலை என்பது ஜாலியான, சந்தோஷமான, கலர் ஃபுல்லாக மட்டுமே இருக்க முடியும். அப்படி ஜாலியாக வரைந்து வைக்கப்பட்ட கலர் ஃபுல் ஓவியக்கண்காட்சி சென்னையில் துவங்கியிருக்கிறது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘தி ஆர்ட்’ கேலரியில் ‘பயணம் இதுவரை’ என்கிற தலைப்பில் ‘யெல்லோ பேப்பர் 7’ என்ற அமைப்பு இந்த ஓவியக்கண்காட்சியை நடத்திவருகிறது.

மூன்று வயது முதல் உள்ள குழந்தைகளின் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. `என் ஓவியம் உங்கள் கண்காட்சி' என்ற வண்ணதாசனின் வரிகளை அப்படியே இந்தக் குழந்தைகளின் ஓவியங்களுக்குப் பொருத்திவிடலாம். குழந்தைகள் அவர்கள் பாணியில் ஓவியங்களை வரைந்துவிட்டனர். உங்கள் பாணியில் நீங்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற சவாலான இன்ட்ரஸ்டிங்கான பல படங்கள் இருந்தன.

ஸ்டாலின்

டி.வியில் தான் பார்த்த கார்ட்டூன் படங்கள், வீட்டில் வளர்க்கும் செடிகள், பறவைகள், கோயில்கள் முதல் வான்காவின் 'ஸ்டேரி நைட்' வரையிலான ஓவியங்களையும் வரைந்து அசத்தியிருந்தனர். போஸ்டர், வாட்டர், ஆக்ரைலிக் மற்றும் ஆயில் உள்ளிட்ட வகையிலான சுமார் 200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. லைட் கிரீன் நிறங்களில் வரையப்பட்ட பனிப்பிரதேச ஓவியம், வரிசையாக இருக்கும் வீடுகள், பஞ்சவர்ணக்கிளி, கடலில் தனியாக நிற்கும் படகு, பீச் ஹவுஸ், கடல் குதிரை, ஸ்டோரி நைட் உள்ளிட்ட பல ஓவியங்கள் மிக அழகாக வரையப்பட்டிருந்தன. 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ரஞ்சித், உதயநிதி ஸ்டாலின், ஆர்டிஸ்ட். மார்க் இரத்தினராஜ், திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்களுக்குப் பிடித்த ஓவியத்தை வாங்கிச்சென்றனர்.

ஸ்மிர்ணாகண்காட்சி பற்றி ஒருங்கிணைப்பாளர் ஸ்மிர்ணா நம்மிடம் பேசும்போது ``எங்களுடைய நான்கு வருடத்துக்கான பயணம்தான் இந்தக் கண்காட்சி. குழந்தைகளின் நிறைய படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருத்தரும் தங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு படத்தை வரைந்துள்ளனர். நான் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று ஓவியம் கற்றுக்கொடுக்கிறேன் என்பதால் என்னுடைய மாணவர்கள் அனைவரையும் சேர்த்து ஒரே இடத்தில் பார்க்க எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகளுக்கும் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். ஒருவர் மற்றொருவரின் படங்களைப் பார்த்து கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும் இந்தக் கண்காட்சி. கலர்ஃபுல்லாக இருக்கும் இந்தக் கண்காட்சியில், அவங்க வரைஞ்ச படத்தை அவங்களே பார்க்கும்போது மிரண்டுட்டாங்க. எல்லாருமே ரொம்ப ஹேப்பி!” என்று பேசினார்.

நேற்று தொடங்கிய இந்தக் கண்காட்சி டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கிறது. ஓவியப்பிரியர்கள் வளர்ந்துவரும் குட்டி ஓவியர்களின் ஓவியங்களைப் பார்க்க ஒரு விசிட் செய்துவாருங்கள். நிச்சயம் கலக்கலான அனுபவமாக இருக்கும்.