வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:09 (07/11/2018)

300 ரூபாய்க்கு சாப்பிட்டால் கார் பரிசு - காரைக்குடியை கலக்கும் விளம்பரம்!

காரைக்குடியில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடையை நோக்கி பொதுமக்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.

 

காரைக்குடி

கட்டடக்கலைக்கு மட்டுமல்லாது அறுசுவை உணவுக்கு புகழ் பெற்றது காரைக்குடி. அசைவம் மற்றும் அறுசுவை உணவுகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளாமனோர் காரைக்குடிக்கு படையெடுப்பர். அந்த வகையில்  காரைக்குடி சண்முகா பாரடைஸ் சைவ உணவுக்கும், நாச்சம்மை ஹோட்டல் அசைவ உணவுக்கும் பிரபலம். இந்த இரண்டு கடைகளும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, `இந்த ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் 300 ரூபாய்க்கு மேல் உணவருந்தினால், அவர்களுக்கு ஆல்டோ பெட்ரோல் கார், சைக்கிள், மிக்சி, கிரைண்டர், ஹாட்பாக்ஸ் போன்ற பொருள்களை குலுக்கல் முறையில் வழக்கப்படும்' என தீபாவளிப் பரிசாக அறிவித்துள்ளது.  

28.10 2018 முதல் 15.01.2019 வரை இந்தச் சலுகை உண்டு. காரை பரிசாகப் பெற வேண்டும் என்ற நோக்கில் உணவுப்பிரியர்கள் மட்டுமல்லாத பல்வேறு தரப்பினர் இந்த ஹோட்டலில் உண்ண குவிந்து வருகின்றனர். இதுவரையிலும் நகைகடை, மளிகைக் கடையில் மட்டுமே கொடுத்து வந்த பரிசுகள் இன்றைக்கு மதுபானக்கூடங்கள் முதல் உணவு விடுதிகள் வரைக்கும் நீண்டுள்ளன. இந்த அதிரடி அறிவிப்பு குறித்து தொழிலதிபர் சிலரிடம்  பேசுகையில், ``விளம்பரம் தான் இன்றைய விஞ்ஞான உலகில் வியாபாரத்தை தீர்மானிக்கும் இதயப் பகுதியாக உள்ளது. ஆகையால், தொழில் போட்டிகளை  சமாளிக்க  இதுபோன்ற பரிசுகளை அறிவிக்க வேண்டியது இருக்கிறது . பத்திரிகை விளம்பரம் தனிநபருக்கு போய் சேருகிறது. நுகர்வோர் மூலம் நாம் பெறும் லாபத்தை நுகர்வோருக்கே திரும்பவும் கொடுக்கிறோம் அது எங்களுக்கு மிக்க மிகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க