வெளியிடப்பட்ட நேரம்: 01:04 (07/11/2018)

கடைசி தொடர்பு:08:26 (07/11/2018)

``தானம் செய்வது தாய்மை நிகரே!"  - தன் பிறந்தநாளில் கமலஹாசனின் கோரிக்கை வீடியோ! #Video

க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாளான இன்று (7-ம் தேதி)  உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில், அவருடைய குரலில் பதிவு செய்த வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். 

கமல்ஹாசன்

தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். ஏற்கெனவே 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு 15-ம் தேதி சென்னை மருத்துவக்கல்லூரியில் இறந்தபிறகு தன் உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருக்கிறார். அவருடைய மகள்கள் உட்பட குடும்பத்தினரும் பதிவு செய்திருக்கிறார்கள். ரத்த தானம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது மற்றும் பல்வேறு நற்பணிகளில் மன்றத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தன் பிறந்த நாளை முன்னிட்டு உறுப்புதானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள், உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலம் வலியுறுத்திருந்தார். இந்த நிலையில், அவர் உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில், ``தாயாய் மாற அழகு குறிப்பு..." என்ற தலைப்பில், அவருடைய குரலில் பதிவு செய்த வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள். 

 

 

 

 

 

தாயாய் மாற அழகு குறிப்பு...

 

மண்ணில் புதையவும் தீயில் கரியவும் 
சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும் 
எத்தகைய நியாயம்! ஏது, இதில் லாபம். 
எனக்குப் பின்னால், எலும்பும் தோலும் உறுப்பும் எல்லாம்... 
எவருக்கேனும் உயிர் தரும் என்றால்... 
அதுவே ஷித்தி; அதுவே மோட்சம் என்றே நம்பும் சொர்க்கவாசி நான்.  

 

மனிததோல் பதினைந்து கஜத்தில், 'ஏழு ஜோடி செருப்புகள்' தைத்தால்
அவை அத்தனையும் என்னைச் சொர்க்கம் சேர்க்கும். 

 

காண இன்பம் தொடர்ந்து காண்போம்; கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்.  
காற்றடைத்த பையின் இடத்தில், இன்னொரு உயிரை வாழவிட்டால்... 
ஆணாய் பிறந்த சோகம் போக்கி, தாயாய் மாறத் தேர்ந்துவிடலாம். 

 

மண்ணில் புதையவும் தீயில் கரியவும் 
சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும் 
எத்தகைய நியாயம். ஏது இதில் லாபம்! 
தானம் செய்வது தாய்மை நிகரரே! 
தகனம் செய்முன் தானம் செய்வீர்!
உமக்கில்லாததை தானம் செய்வீர்!

என்று முடிகிறது அந்த வீடியோ வரிகள். மேலும், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஆன்லைன் லிங்க் வெளியிட்டு இருக்கிறார்கள். 

 

 

அந்த லிங்கில் சென்று உடல் தானத்துக்குப் பதிவு செய்த பிறகு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிருமாறு வலியுறுத்துகிறது அந்தப் பதிவு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க