வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:08:40 (07/11/2018)

``திரையில் மட்டுமே முடியும்... நிஜத்தில் முடியாது..." - விஜய்யை விமர்சித்த தமிழிசை! 

``திரையில் ஆள்வதுபோல, நிஜத்தில் மக்களை ஆள நினைப்பது சாத்தியமில்லை. இது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்" என்று நடிகர் விஜய் நடித்த `சர்கார்' பற்றிய கேள்விக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

 தமிழிசை

பாரதிய ஜனதா சார்பில் 'மக்களோடு தீபாவளி' என்ற பெயரில் தீபாவளிக் கொண்டாட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்தது. அதில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். நிகழ்ச்சியில் `மியூசிக்கல் சேர்',  `லெமன் இன் ஸ்பூன்' உள்ளிட்ட போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் கௌரவித்தார்.

பின்னர் 'சர்கார்' படம் குறித்த கேள்விக்குச் செய்தியாளர்களுக்குப் பதில் அளித்த தமிழிசை செளந்தர்ராஜன், ``மூன்று மணி நேரத் திரைக்கதையில் முதல்வராகவோ, பிரதமராகவோ எளிதாக நடித்துவிடலாம். ஆனால், நிஜத்தில் முதல்வராவது அவ்வளவு எளிதில்லை. அரசியலில் நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றுவது சவாலான காரியம். எனவே, திரையில் சர்க்கார் அமைப்பதற்கும் நிஜத்தில் அரசு அமைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இது அரசியல் களத்திலிருப்பவர்களுக்கும் தெரியும்; திரையில் நடிப்பவர்களுக்கும் தெரியும் என்று மறைமுகமாக நடிகர் விஜய்யை விமர்சித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க