வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:08:42 (07/11/2018)

தடை நேரத்தில் பட்டாசு வெடிப்பு - தமிழகம் முழுவதும் 700 பேர் மீது வழக்கு?

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த சுமார் 700 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தீபாவளி

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சில கட்டப்பாடுகள் விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தமிழகத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் எனப் பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியது. மேலும், இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதியப்படும் எனவும் தெரிவித்தது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி சிறுவர்கள் பட்டாசு வெடித்ததையடுத்து 25 சிறுவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 13 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதேபோல் கோவை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 30 பேர் மீதும்,  திருப்பூர் மாவட்டத்தில் 57 பேர் மீதும், திண்டுக்கல் நகரில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 135-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரத்தில் மட்டும் 68 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாகத் தமிழகம் முழுவதும்  அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சுமார் 700-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க