வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (07/11/2018)

கடைசி தொடர்பு:15:30 (07/11/2018)

நேரத்தை தாண்டி வெடித்தார்களா?- சர்ச்சையில் காஞ்சி கோயில்

காஞ்சிபுரத்தில் தீபாவளிப் பண்டிகையன்று உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டு காமாட்சி அம்மன் வீதி உலா புறப்பட்டது. 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பட்டாசு வெடிப்பு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பண்டிகை காலங்களில் சிறப்பு பூஜை மற்றும் அம்மன் வீதி உலாவருவது வழக்கம். காமாட்சி அம்மன் கோயிலில் தீபாவளியன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதன்பின் காலை 7.30 மணியளவில் அம்மன் வீதி உலா புறப்பட்டது. அப்போது கோயில் வாயிலில் அர்ச்சகர்கள் பத்து நிமிடம் சரவெடிகளை வெடித்தனர். 

தீபாவளிப் பண்டிகை தினத்தில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி தமிழகத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு தமிழக அரசு நேரம் ஒதுக்கி இருந்தது. மேலும், தமிழக அரசின் இந்த விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 700 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்ததற்கு அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

விதிமீறல் குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இது குறித்து பேச விரும்பவில்லை என்று கூறினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க