வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (07/11/2018)

கடைசி தொடர்பு:15:05 (07/11/2018)

நாட்டுக்கோழி... பிரியாணி அரிசி... 7000 தொண்டர்களுக்குத் தீபாவளி பரிசு கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ

தீபாவளிப் பரிசாக தங்கள் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கோழி பரிசாக வழங்கியுள்ளார் அ.தி.மு.க எம்.எல்.ஏ 

எம்.எல்.ஏ

பொதுவாக தீபாவளி உட்பட பிற விழாக்களில் அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவை வழங்குவது வழக்கம். அதிலும் சிலர் தீபாவளிக்கு வித்தியாசமாக ஏதாவது செய்து ஆச்சர்யப்பட வைப்பார்கள் . அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட மற்றும் புதுப்பாளையம் ஒன்றிய, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு என 7,000 பேருக்கு, தீபாவளிப் பரிசாக ஆளுக்கொரு உயிருடன் கறிக்கோழி. அதைச் சமைக்கத் தேவையான மசாலாப் பொருள்கள், அதோடு 2 கிலோ பிரியாணி அரிசி மற்றும் கடிகாரம், ஸ்வீட், பட்டாசு பொருள்கள் போன்றவற்றைப் பரிசாக வழங்கி குஷிப்படுத்தினார். 

இதை வாங்கிக்கொண்ட கட்சித் தொண்டர்கள் குஷியில், `எங்கள் எம்.எல்.ஏ வாழ்க' என்று கோஷம் எழுப்பியதோடு, `எங்க எம்.எல்.ஏ இப்படி ஆச்சர்யப்பட வைப்பார் என்று நினைக்கவில்லை' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க