வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (07/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (07/11/2018)

`கந்தசஷ்டி விழா நாளை தொடக்கம்’ - திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

கந்தசஷ்டி விழா நாளை தொடங்குவதை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள்

முருகப் பெருமானின் அறுபடை  வீடுகளில் இரண்டாம்படை வீடு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா, நாளை (08.11.18) காலை யாகசாலை பூஜையுடன்  தொடங்குகிறது. 

யாகசாலை பூஜையை முன்னிட்டு, நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளி பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடைபெற உள்ளது.

திருக்கல்யாணம், வரும் 14-ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும். நாளை கந்தசஷ்டி திருவிழா  தொடங்குவதை முன்னிட்டு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் இன்று காலை முதலே திருக்கோயிலில் தங்கியுள்ளனர். கந்த சஷ்டிவிழாவை முன்னிட்டு திருக்கோயில் கிரிப்பிரகாரத்தில் தற்காலிக தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொட்டகையிலும், இடும்பன் மண்டபம், கந்த சஷ்டி மண்டபத்திலும் பக்தர்கள் குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணி, கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்றுவருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க