வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (07/11/2018)

கடைசி தொடர்பு:23:45 (07/11/2018)

கமல்ஹாசன் பிறந்தநாளில் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ரசிகர்கள்!

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவரது தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் பிறந்த நாள்  காஞ்சிபுரம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இன்று தன் 64-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை ரசிகர்களும் வழக்கத்தைவிட உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் பிள்ளையார் பாளையத்தில், மக்கள் நீதி மய்ய மாவட்டத் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை ரசிகர்கள் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூர் செல்லும் வழியில் உள்ள பாலாறு மேம்பாலத்தைச் சுத்தம்செய்தனர்.

ரத்ததானம், காஞ்சிபுரம் மக்கள் நீதி மய்யம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர் தீனதயாளன், “கடந்த வாரம் காஞ்சிபுரம் பாலாறு பாலத்தில் சுவர் விளம்பரம் செய்தோம். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு பாலத்தில் இருந்த மணலால் வாகனம் ஓட்டுவதில் சிரமம் இருந்தது.  அதைப் பார்த்ததும் நாங்கள் அந்தப் பாலத்தை சுத்தம்செய்துகொடுக்க வேண்டும் என முடிவெடுத்தோம். தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, பாலத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுவருகிறோம். இதைக் கேள்விப்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தொண்டு அமைப்புகள் எங்களுடன் கைகோத்துச் செயல்பட முடிவெடுத்துள்ளனர். அதுபோல கட்சியில் உறுப்பினராக இணைபவர்களுக்கு மரக்கன்று கொடுக்க முடிவெடுத்துள்ளோம். எங்கள் வேலைகளைப் பார்த்து இளைஞர்கள் கட்சியில் சேர்ந்துவருகிறார்கள். இதனால், இப்பகுதியில் உள்ள குளங்களைத் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை அதிக அளவில் செய்ய முடிவெடுத்துள்ளோம்.” என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க