வெளியிடப்பட்ட நேரம்: 05:47 (08/11/2018)

கடைசி தொடர்பு:05:47 (08/11/2018)

நிர்மலா தேவி வழக்கில் இன்று முதல் தினசரி விசாரணை!

சமீபத்தில் ஊடகங்களில் வெளியான நிர்மலா தேவியின் வாக்கு மூலம், பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான இந்த வழக்கின் விசாரணை, உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று முதல் தினசரி விசாரணை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

நிர்மலா தேவி

நிர்மலா தேவி கூறியதாக வெளியிடப்பட்ட வாக்குமூலம் அனைத்தும் பொய் என்றும் யாரையோ காப்பாற்ற அது சி.பி.சி.ஐ.டி. எழுதிய கதை என்றும் நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம்  முருகனும், கருப்பசாமியும் செய்தியாளர்களைப் பார்த்து கூறியுள்ள நிலையில், நிர்மலாதேவி மட்டும் அதைப்பற்றிப் பேசாமல் இருந்தார். செய்தியாளர்கள் எவ்வளவோ கேட்டும் அவர் பேச மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமியை ஜாமீனில் விடாமல் சிறையில் இருக்கும் காலத்திலேயே வழக்கை விரைவாக நடத்தி அவர்களுக்குத் தண்டனையை பெற்றுக் கொடுத்துவிட சிபிசிஐடி த் தரப்பு திட்டமிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நீதிமன்றம் வரும் நிர்மலா தேவி, தன்னுடைய வாக்குமூலம் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் ஏதாவது தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.... அப்படி அவர் வாய் திறந்தால் அது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அப்படி அவர் வாய் திறந்தால் இந்த வழக்கில் இன்னொரு கோணம் தெரியும் என்கிறார்கள். இதனால் இன்றைய விசாரணை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க