3 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தம்! - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொடரும் அவலம் | Power generation stoppage in 3 units of Thoothukudi thermal station

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (08/11/2018)

கடைசி தொடர்பு:10:49 (08/11/2018)

3 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தம்! - தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொடரும் அவலம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், ஒரே நாளில் 3 யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

thoothukudi thermal power station

இந்தியாவில் உள்ள பழைமையான அனல்மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல்மின் நிலையமும் ஒன்றாகும். நிலக்கரி அடிப்படையிலான இந்த அனல்மின் நிலையம், கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா, 210 மெகாவாட் மின்உற்பத்தி வீதம், நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.

இதில் உள்ள முதல் மூன்று யூனிட்டுகள், நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கிவருகிறது. இதனால், இவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபடுகிறது. பின்னர், சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்குவதும் வழக்கமாகிவிட்டது. சில சமயம், தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைபட்டு வந்தது. கடந்த மாதம் நிலக்கரி பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைபட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அனல்மின் நிலையத்தில், மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, 2-வது, 3-வது மற்றும்       5-வது யூனிட்டில் மின்சார உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.  மறு உத்தரவு வரும் வரை, இந்த 3 யூனிட்டுகளில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது, மீதமுள்ள 1-வது மற்றும் 4-வது யூனிட்டுகளில் மட்டும் மின்சார உற்பத்தி நடைபெற்றுவருகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க