நீங்களே டாக்டர்னு கையெழுத்துப் போட்டுடுங்க’ - போதையில் உளறிய திருவையாறு அரசு டாக்டர்! | Drunken Doctor slept during duty at thiruvaiyaru Government Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (08/11/2018)

கடைசி தொடர்பு:13:35 (08/11/2018)

நீங்களே டாக்டர்னு கையெழுத்துப் போட்டுடுங்க’ - போதையில் உளறிய திருவையாறு அரசு டாக்டர்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், குடிபோதையில் பணிக்கு வந்ததோடு, ஓய்வறையில் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மருத்துவர்

Representative Image 

திருவையாறு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் மகபூப் பாட்ஷா, நேற்று முன்தினம் இரவு மது போதையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். தனது ஒய்வறையில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு தூங்கியிருக்கிறார். அப்போது இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சிகிச்சை தொடங்குவதற்கான பதிவேட்டில், மருத்துவர் மகபூப் பாட்ஷாவின் கையெழுத்து தேவைப்பட்டுள்ளது.

ஓய்வறையில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு மகபூப் பாட்ஷா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால், அங்கு பணியாற்றும் நர்ஸ் , செல்போனில் தொடர்புகொண்டிருக்கிறார். போதையில் உளறிக் கொட்டிய மகபூப் பாட்ஷா, ‘நீங்களே டாக்டர்னு கையெழுத்துப் போட்டுடுங்க” என தெரிவித்துள்ளார். இது ஆடியோ ஆதாரங்களுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், மருத்துவர் மகபூப் பாட்ஷா துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.