வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (08/11/2018)

கடைசி தொடர்பு:14:26 (08/11/2018)

`சர்கார்’ இலவசங்களைப் பெற்ற மக்களைப் புண்படுத்துகிறது! - ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீஸில் புகார்

சர்கார் மீது அடுக்கடுக்காகத் தொடர் புகார்கள் எழுந்துவரும் நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முருகதாஸ்

விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் 'சர்கார்'. இத்திரைப்படத்தில், அ.இ.ம.மு.க என்ற கட்சியின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் மாசிலாமணி என்ற பெயரில் பழ.கருப்பையா நடித்துள்ளார். இதில், மாசிலாமணியின் மகளாக கோமளவள்ளி என்ற பெயரில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். `இதில், அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர்களை மக்கள் தீயில் போடுவதுபோல காட்சி வைக்கப்பட்டுள்ளது. கோமளவள்ளி என்பது மறைந்த முதல்வரின் இயற்பெயராகும். அரசு வழங்கிய இலவசப் பொருள்களை தீயில் போடுவது என்பது அரசை அவமதிக்கும் காட்சிகள்' என அ.தி.மு.க-வினர் பரவலாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். 

இந்தப் படத்தின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனு,