வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (08/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (08/11/2018)

‘வனத் துறையில் 1,147 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

'வனத் துறையில் உள்ள 1,147 காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம்மூலம் விரைவில் நிரப்பப்படும்' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வேலூர் கோட்டையில் இன்று நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘வனத் துறையில் 1,147 காலிப் பணியிடங்கள் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டு, பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் சந்தன மரங்கள், செம்மரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. ஆந்திராவில் இருந்துதான் செம்மரங்கள் வெட்டி இங்குக் கடத்திவரப்படுகின்றன. இதைத் தடுக்க, செக் போஸ்ட்டுகளில் வனத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் செம்மரக் கடத்தலுக்குச் செல்வதைத் தடுக்க, அவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. வேலூர் மாவட்ட மலைக்கிராமங்களில் சாலை வசதி அமைக்கவும் வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்திய வனப்பரப்பளவில் 33 சதவிகிதம் வனப்பரப்பளவுடன் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. காடுகளில் மரக்கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.