வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (08/11/2018)

கடைசி தொடர்பு:15:17 (08/11/2018)

`சர்காரை இன்னும் பார்க்கவில்லை'- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

``உலகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் பெட்ரோல், டீசல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது'' என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன் ராதாகிருஷ்ணன்

மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ``இலவசப் பொருள்கள் இப்பொழுது எங்கு உள்ளது என மக்களுக்குத் தெரியும். சர்கார் படம் இன்னும் பார்க்கவில்லை. அந்தப் படத்தில் பொய்யான தகவல் இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேவர் மகன் முதல் பாகத்தில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்துகள் இல்லை. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது பண மதிப்பு இழப்பு நடவடிக்கையாகும்.

பட்டாசு வெடிப்பது குழந்தைகளுக்கான திருவிழா. பட்டாசு வெடித்த குற்றத்துக்குப் பெற்றோர்களை கைது செய்வது தவறு. உலக அளவில் ஏற்பட்ட மாற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை மாறியுள்ளது. இன்னும் குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் தொழில் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடி புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். விண்ணப்பம் செய்த 59 நிமிடங்களில் கடன் கிடைக்கும். இதனால் சிறு - குறு தொழில் அதிபர்கள் வெகுவாக வளர்ச்சியடைவார்கள். விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்'' என்றார்.