வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:05 (08/11/2018)

வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்! - திருவாரூர் கலெக்டர் அதிரடி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் டெங்கு கொசுக்கள் ஒழிப்பில், மற்ற அதிகாரிகளை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல், இவரே நேரடியாகக் களத்தில் இறங்கி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இவர், சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்காத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கிறார்.

திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ்

திருவாரூர் நகரப் பகுதிகளில் நேற்று இவர் ஆய்வு மேற்கொண்டபோது, தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சுற்றுப்புற பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய நிலையில் மிகவும் அசுத்தமாக இருந்துள்ளது. அந்நிறுவனத்துக்கு 50,000 ரூபாய் அபாரதம் விதித்துள்ளார் ஆட்சியர் நிர்மல்ராஜ். இங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் வலியுறுத்தினார். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்காத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.5 லட்சத்தை எட்டியுள்ளது. டெங்கு கொசுக்கள் ஆய்வுப் பணி மேலும் தொடரும் எனவும், இதனால் பொதுமக்கள், வணிகர்கள் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.