வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/11/2018)

கடைசி தொடர்பு:19:20 (08/11/2018)

நிர்மலா தேவி வழக்கு! - குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக்கோரி முருகன், கருப்பசாமி மனு!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தங்களை விடுவிக்க வேண்டுமென்று பேராசிரியை நிர்மலாதேவியுடன் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் புதிய மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.

நிர்மலாதேவி

விரைந்து இந்த வழக்கை முடிக்கும் வகையில் தினசரி இவ்வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இன்று ஆஜராக வந்தபோது தங்களை இந்தவழக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று முருகனும் கருப்பசாமியும் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், நிர்மலாதேவி எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. இவர்களின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதிபதி, மீண்டும் வரும் 12-ம் தேதி மூவரும் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக முருகனும்,கருப்பசாமியும் ஒவ்வொரு முறை நீதிமன்றம் வரும்போதும் செய்தியாளர்களிடம் கூறிவரும் நிலையில், நிர்மலாதேவியோ அமைதியாக வந்துவிட்டுச் செல்கிறார். இன்றும் செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் போலீஸ் வாகனத்தில் ஏறிச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க