`ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு சான்றிதழுடன் சால்வை, திருக்குறள் புத்தகம்!’ - கடலூர் போலீஸார் கௌரவம் | Cuddalore police personnel's new method to promote Helmet Awarness

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:50 (09/11/2018)

`ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு சான்றிதழுடன் சால்வை, திருக்குறள் புத்தகம்!’ - கடலூர் போலீஸார் கௌரவம்

கடலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தொடர்ந்து காவல் துறையினர் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கடந்த 3 மாதத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக சுமார் 30,000 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

ஹெல்மெட்

இந்நிலையில் கடலூர் புது நகர் காவல் நிலைய போலீஸார் மற்றும் கடலூர் போக்குவரத்து காவல்துறை போலீஸார் இணைந்து கடலூர் நகரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த சால்வை, `சிறந்த குடிமகன்’ சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகம் ஆகியவற்றை வழங்க முடிவு செய்தனர்.

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கான பாராட்டு மடல்

இதையடுத்து இன்று காலையில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போக்குவரத்து காவல்துறை 
சப் இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் மற்றும் போலீஸார் கடலூர் பாரதி சாலையில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்குச் சால்வை அணிவித்து, சிறந்த குடிமகன் சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகமும் வழங்கினார்கள். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடலூர் காவல் துறையின் வித்தியாசமான ஹெல்மெட் விழிப்பு உணர்வு முயற்சி பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.