வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:19 (09/11/2018)

`அப்பாவின் வாழ்வை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!' - லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை பி.கே.கிருஷ்ணசாமி காலமானார். அவருக்கு வயது 96. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணனின் முன்னோர்கள் பணி நிமித்தம் கேரளாவின் பாலக்காட்டில் குடியேறியவர்கள். தன்னை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர், ராஜாஜியுடன் நெருங்கிய நட்புறவை பகிர்ந்திருந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை.

லட்சுமி ராமகிருஷ்ணன்

தன் தந்தை இறந்தது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியபோது, ``ஒரு பிரின்சிபலோட வாழ்ந்தவர் அப்பா. எங்க குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் கேப்டனா அவர் தன்னோட கடமையை பெர்ஃபெக்டா செய்தவர். அதனால குடும்ப உறுப்பினர்கள் யாரா இருந்தாலும் அவரோட ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்படறவங்களாகவே இருந்தோம். இது ஏதோ சர்வாதிகாரம்னு நினைக்காதீங்க. ஒருவித ஒழுங்கு.. என்னைப் பொறுத்தவரை அப்பாவின் கண்டிப்பும் வளர்ப்புமே என்னை ஆளாக்கியதுன்னு சொல்வேன்.

தன்னோட வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மத்தவங்களுக்கு உதாரணம் சொல்ல முடியறதா வாழ்ந்து காட்டிட்டுப் போயிருக்கார். அதனால இந்த நேரத்துல அவரோட இழப்பை எண்ணி வருந்தறதைக் காட்டிலும் அவசியமானது அந்த வாழ்க்கையை நினைத்துப் பெருமைப்படணும். நான் பெருமைப்படறேன்' என்கிறார்.