`அதிகாரம் கையில் இருப்பதால் அடக்க நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல!' - ஜி.கே.வாசன் | GK Vasan Slams ADMK party over Sarkar Controversy

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (09/11/2018)

`அதிகாரம் கையில் இருப்பதால் அடக்க நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல!' - ஜி.கே.வாசன்

`சர்கார்' படத்தில் நல்ல கருத்துகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

``சர்கார் படத்தில் நல்ல கருத்துகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதில் உடன்பாடு இல்லையென்றால் பேச்சுவார்த்தை மூலமாகவோ, சட்ட ரீதியாகவோ தீர்த்துக்கொள்ள வேண்டும். அதிகாரம் கையில் இருப்பதால் அடக்க நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல.'' என்று, தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். 

ஜி.கே.வாசன்


இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகை தந்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``நம் நாட்டில் அதிகமான கஷ்ட நஷ்டம் உள்ளதாக பட்டாசுத் தொழில் ஆகிவிட்டது. சீனப் பட்டாசுகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடித்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை போடப்பட்ட வழக்குகளை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். சுற்றுச்சூழல் மாசு மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் மிகமிக குறைவு. வரும் காலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறி? தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் குறித்து முறையாக அறிவித்தல் த.மா.கா, அதன்பின் நிலைப்பாட்டை அறிவிக்கும்.
மதச்சார்பின்மை இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. தேசியக் கூட்டணி பற்றி அனைத்துக் கட்சிகளும் அறிவிக்கும்போது, நாங்களும் முறையாக அறிவிப்போம். பல்வேறு முக்கியத் திட்டங்களை கிடப்பில் போடப்பட்டும், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கத் தவறியதாகவும் அ.தி.மு.க அரசு உள்ளது'' என்றவரிடம், 'நடிகர்கள் அரசியலுக்கு வருவது' பற்றிய கேள்விக்கு, ``எந்தத் துறையைச் சார்ந்தவர்களும் அரசியலுக்கு வரலாம். அதில் சினிமாத்துறையும் ஒன்றுதான்.  சினிமா நடிகர்கள் இங்கு வருவதால், யாரும், யாரையும் மிரட்டவோ உருட்டவோ முடியாது.'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க