வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (09/11/2018)

கடைசி தொடர்பு:21:20 (09/11/2018)

`ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களைப் பாராட்டியவர் விஜய்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு

சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தியதால், அதிருப்தியான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்' என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ``சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது வரவேற்கத்தக்கது, விஜய் நல்லவர்; நல்ல நடிகர். எந்தத் துறையிலும் முத்திரை பதிக்கக்கூடியவர். ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களை வாழ்த்திப் பேசியவர், இப்போது படத்தில் மட்டும் எதிர்க்கிறார், மக்கள் நலத் திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை எதிர்ப்பதாக சர்கார் படத்தில் காட்சி அமைந்திருந்தால், அதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறுவது தவறான தகவல். சர்கார் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க ஆட்சி காலத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை அவர்கள் ஆதரவு தொலைக்காட்சிக்குத் தரவில்லை என்பதற்காக, அப்படத்தை சி.டியில் வெளியிட்டவர்கள் தி.மு.க-வினர் என்பதை மறந்துவிடக் கூடாது’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க