வெளியிடப்பட்ட நேரம்: 06:28 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:25 (10/11/2018)

`காட்சியை ரத்து செய்தாலே வெளியேறுவோம்' - போலீஸுடன் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க-வினர்!

சேலத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் சர்கார் படத்தைத் திரையிட்டதாக கூறி அ.தி.மு.க-வினர் சர்கார் படத்தின் பேனர்களைக் கிழித்து திரையரங்குக்குள் புகுந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

அதிமுகவினர்

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் திரையிட்டதாக கூறி சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் முன்பு வைக்கப்பட்டிருந்த திரைப்பட பேனர்களை அ.தி.மு.க தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். திரையரங்கம் உள்ள சாலையில் வைத்திருக்கும் அனைத்து பேனர்களும் வரிசையாகக்  கிழித்து அடித்து நொறுக்கினர். தொடர்ந்து திரையரங்கில் புகுந்து படத்தை திரையிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், திரையரங்கு முன்பு அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்கார் படத்தின் காட்சி ரத்து செய்த பின்பு தியேட்டரை விட்டு வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து சேலம் கௌரி திரையரங்கிலும் அ.தி.மு.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுதான் திரையிட வேண்டும் என்றும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்க மேலாளர் மற்றும் கௌரி தியேட்டர் நிர்வாகம் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்ட பின்புதான் இனி சர்கார் படத்தை திரையிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.