வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:40 (10/11/2018)

`தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும் சமூகம்' - சி.வி.குமார் வேதனை!

``ரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்கத் தெரியாத ஒரு சமூகம் இங்கு கட்டமைக்கப்படுகிறது" என்று அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் போன்ற படங்களின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

சி வி குமார்

விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று 'சர்கார் ' திரைப்படம்' வெளியானது. நிகழ்கால அரசியலை  மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதே நேரத்தில் ஆளும் கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வந்தனர். 

சர்கார்  பற்றிய தயாரிப்பாளர் கருத்து

இந்த நிலையில், 'சர்கார்' படத்துக்குத் தமிழ் திரையுலகத்தில் ரஜினி, கமல், விஷால் எனப் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. படம் மறு தணிக்கைக்குச் சென்று சான்றிதழும் பெற்றது. இதற்கிடையே  பல நட்சத்திரங்கள் ட்விட்டரில் படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில், 'திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனதந்தை நடத்தி வருபவரும் இயக்குநருமான சி.வி.குமார், தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், ``ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்கத் தெரியாத ஒரு சமூகம் தன் பிரச்னைகளுக்கான தீர்வை , தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தையே இங்கு தொடர்ந்து கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள் அனைவரும்....' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க